/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாட்டு பணிகளால் ரயில்கள் தற்காலிக ரத்து
/
மேம்பாட்டு பணிகளால் ரயில்கள் தற்காலிக ரத்து
ADDED : பிப் 05, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தெலுங்கானா மாநிலம், மந்தமர்ரி ரயில்வே ஸ்டேஷனில், மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கோராக்பூர் - திருவனந்தபுரம் 'ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்' பிப்., 12, 13 தேதிகளிலும், திருவனந்தபுரம் - கோராக்பூர் எக்ஸ்பிரஸ், பிப்., 10, 11 தேதிகள் முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பரவுணி - எர்ணாகுளம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், பிப்., 9ம் தேதியும், எர்ணாகுளம் - பரவுணி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், பிப்., 13ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

