/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருள் விலை உயர்வு அரசு கட்டட பணிகள் பாதிக்கும்
/
கட்டுமான பொருள் விலை உயர்வு அரசு கட்டட பணிகள் பாதிக்கும்
கட்டுமான பொருள் விலை உயர்வு அரசு கட்டட பணிகள் பாதிக்கும்
கட்டுமான பொருள் விலை உயர்வு அரசு கட்டட பணிகள் பாதிக்கும்
ADDED : ஏப் 25, 2025 11:30 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில், அரசு கட்டட பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், அரசு சார்ந்த கட்டட பணிகளை டெண்டர் முறையில் ஒப்பந்ததாரர்கள் எடுத்து செய்து வருகின்றனர். ஒன்றியத்தில், 25க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.
தற்போது, எம்.சாண்டு, பி.சாண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் டெண்டர் வாயிலாக கட்டுமானப் பணிகள் எடுத்து செய்வதில் சிக்கல் நிலவுகிறது.
ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினர் கூறியதாவது:
அரசு சார்ந்த கட்டட பணிகளை ஒப்பந்த முறையில் செய்து வந்தோம். இதில், எம்.சாண்டு விலை 5 ஆயிரமும், பி.சாண்டு விலை 6 ஆயிரம் மற்றும் ஜல்லிக்கட்டு 4 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
தற்போது, இந்த கட்டுமான பொருட்கள் விலை, 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது மட்டும் இன்றி, சிமென்ட் மூட்டை விலை, 320 லிருந்து 370 ஆகவும், பணியாட்கள் கூலியில் 100 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதனால், ஒப்பந்ததாரர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் மற்றும் இதர அரசு சார்ந்த கட்டட பணிகள் அனைத்தும் முழுமை பெறும் தருவாயில் இருப்பதால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. கடந்த ஜனவரி மாதத்தில் ஊராட்சி தலைவர்கள் பதவி காலம் முடிந்த பின், புதிதாக எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இனி வரும் நாட்களில் புதிதாக டெண்டர் முறையில் பணிகள் மேற்கொள்ள அனைவரும் யோசிக்கின்றனர். எனவே, இதை சரி செய்ய ஒப்பந்த பட்டியல் விலை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.