/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் திரியும் மாடுகளால் ஆபத்து
/
சாலையில் திரியும் மாடுகளால் ஆபத்து
ADDED : பிப் 17, 2025 10:43 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகரில், பங்களா மேடு பகுதி சாலையில் சுற்றும் மாடுகளால், பள்ளி மாணவர்களும், பொது மக்களும் அச்சமடைகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன.
இதில் பல வார்டுகளில், பொது மக்கள் பசு மாடுகளை வளர்க்கின்றனர். ஆனால் பலர் தங்கள் மாடுகளை கட்டி வைக்காமல், வீதிகளில் சுற்றி திரிய விட்டு விடுகின்றனர்.
பங்களா மேடு, ராஜபுரம் பகுதிகளில் வீடுகள் அதிக அளவில் உள்ளன. இங்கு துவக்கப்பள்ளியும், கோவிலும் அருகருகே உள்ளன. பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இக் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில், சுற்றும் மாடுகள் டிரான்ஸ்பார்மர் அடியில், நின்றும், படுத்துக் கொள்கின்றன.
சில நேரங்களில் மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடுகின்றன.
இதனால் பள்ளிக்கு வரும் சிறுவர்களும், இவ்வழியாக செல்லும் மக்களும் அச்சமடைகின்றனர்.
அவ்வழியாக வரும் வாகனங்கள் மீது மாடுகள் மோதுவதால், அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
மாடுகளால் இப்பகுதியில் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, சாலையில் சுற்றும் மாடுகளை பிடிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.