/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
/
சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஏப் 28, 2025 06:53 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, நெ.10 முத்தூரில் ரோட்டோரம் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது.
கிணத்துக்கடவு அருகே, வன்னி குமார சுவாமி கோவிலில் இருந்து நெ.10 முத்தூர் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளது.
இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள மின் கம்பம் பல நாட்களாக சாய்ந்த நிலையில் இருக்கிறது. மேலும், கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் தாழ்வாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போதும், ஓவர் டேக் செய்யும்போதும் இந்த மின் ஒயர்களில் உரசி பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இது மட்டுமின்றி, இந்த மின்கம்பம் சாய்ந்த இடத்தின் அருகே விளை நிலம் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை இப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால் கால்நடைகளுக்கு விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, மின்வாரித்தினர் இதை உடனடியாக கவனித்து மின்கம்பத்தை விரைவாக மாற்றியமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

