ADDED : பிப் 03, 2025 04:01 AM

கிணத்துக்கடவு : வடசித்தூர் -- நெகமம் ரோட்டில், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதால், பைக் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
வடசித்தூர் --- நெகமம் ரோட்டில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த வழித்தடத்தில், விளைபொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் சிறு தொழில்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளன.
இந்த வழித்தடத்தில், அதிக அளவு வளைவு பகுதிகள் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் மெதுவாக சென்று வருகின்றனர். இதில், விவசாயிகள் பலர் ஆபத்தை உணராமல், டிராக்டரில் அதிக அளவு பாரம் ஏற்றி கால்நடை தீவனம் கொண்டு செல்கின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்களுக்கு ரோடு முழுமையாக தெரிவதில்லை.
மேலும், ரோட்டில் உள்ள வளைவு பகுதிகளில் விபத்து அபாயம் உள்ளது. பைக் ஓட்டுநர்கள் பாதுகாப்பு கருதி, அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

