/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்புகள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
/
தடுப்புகள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 18, 2025 09:12 PM

நெகமம்; மூட்டாம்பாளையம் --- கக்கடவு செல்லும் ரோட்டில், நீரோடை அருகே தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.
நெகமம் அருகே, மூட்டாம்பாளையம் -- கக்கடவு செல்லும் வழித்தடத்தை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் ரோட்டின் இரு பகுதியிலும் நீரோடை உள்ளது.
மழை காரணமாக, இந்த நீரோடையில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு, ரோட்டின் ஓரத்தில் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.
மேலும், பகல் நேரத்தில் இவ்வழியில் பயணிப்பவர்கள், குப்பையை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன விபத்து தவிர்க்க தடுப்புகள் அமைப்பதுடன், குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.