/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழியை மூடாததால் விபத்து அபாயம்
/
குழியை மூடாததால் விபத்து அபாயம்
ADDED : மே 28, 2025 11:42 PM

மேட்டுப்பாளையம்; குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், குழியை மூடாமல் விட்டுள்ளனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சிக்கு, மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு, ராட்சத இரும்பு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தினமும், 19 கோடியே, 60 லட்சம் லிட்டர் தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுத்து, பம்பிங் செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நடூர் பாலம் அருகே இக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாயில் இருந்து, 25 அடிக்கு தண்ணீர் பீறிட்டு அடித்தது. இதனால் பாலத்தின் இரு பக்கம் சாலைகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த சாலையின் ஓரத்தில் வாகனங்கள் வராமல் இருக்க, போலீசார் தடுப்புகள் வைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், குழி தோண்டி இரும்பு குழாயில் வெல்டிங் செய்து, உடைப்பை சரி செய்தனர்.
இப்பணிகள் நான்கு நாட்களாக நடந்தன. குழாய் உடைப்பை சரி செய்த மாநகராட்சி அதிகாரிகள், குழியை மூடாமலும், சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இரண்டு நாட்களாகியும், இன்னும் குழியை மூடாமல் உள்ளனர். இதனால் அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
குழியை மண் கொட்டி மூடவும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.