/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம்
/
சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : டிச 10, 2025 09:02 AM
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், அதிகளவில் சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து தேங்காய், தேங்காய் மட்டை பாரம் ஏற்றி டெம்போ மற்றும் இதர சரக்கு வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.
இதில், பெரும்பாலான வாகனங்களில், அதன் மேற்பரப்பில் தார்பாலின் பைகள் கொண்டு மூடாமல் செல்வதால், ரோட்டில் உள்ள வேகத்தடை, குறுக்கு பட்டை மற்றும் வளைவு பகுதிகளில் தேங்காய் மட்டை சிதறி விழுகிறது.
இதனால், சரக்கு வாகனத்தை தொடர்ந்து வரும் பைக் ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க பொருட்கள் கீழே விழுகாத படி தார்பாலின் கொண்டு முறையாக மூடி எடுத்து செல்ல வேண்டும்.
மக்கள் கூறியதாவது:
டிராக்டர், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில், தேங்காய் மற்றும் தேங்காய் மட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது. இதில், பெரும்பாலான வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால் தார்பாலின் கொண்டு மூட முடியாமல் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், விபத்து நேரிடும் என தெரிந்ததுமே, சிலர் சரக்கு வாகனங்களில் 'ஓவர் லோடு' ஏற்றி செல்கின்றனர். இதை போக்குவரத்து போலீசாரோ அல்லது ஆர்.டி.ஓ., அதிகாரிகளும் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

