/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழியால் விபத்து அபாயம்
/
பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழியால் விபத்து அபாயம்
ADDED : பிப் 16, 2024 12:25 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இணைப்புச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே,கோட்டூர் ரோடு - தெப்பக்குளம் வீதி இணைப்புச்சாலை உள்ளது. இந்த ரோடு வழியாக தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், கோட்டூர் ரோடு அருகே உள்ள இணைப்புச் சாலையில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி பள்ளி அருகே, இணைப்புச்சாலையில் உள்ள ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளது. குழியிருந்த பகுதி உள் இறங்கியுள்ளதுடன், மூடியில் உள்ள இரும்பு கம்பி பெயர்ந்து விபத்து ஏற்படுத்துகிறது. போக்குவரத்து நிறைந்த ரோட்டில், இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.