/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்டர்மீடியனில் குவிந்த மண் விபத்து ஏற்படும் அபாயம் புழுதி பறப்பதால்
/
சென்டர்மீடியனில் குவிந்த மண் விபத்து ஏற்படும் அபாயம் புழுதி பறப்பதால்
சென்டர்மீடியனில் குவிந்த மண் விபத்து ஏற்படும் அபாயம் புழுதி பறப்பதால்
சென்டர்மீடியனில் குவிந்த மண் விபத்து ஏற்படும் அபாயம் புழுதி பறப்பதால்
ADDED : மார் 07, 2024 04:22 AM
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி நகரில், ரோட்டில் படிந்து நிற்கும் மண்ணை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முன்வராததால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து, பிரதான நகரங்களுக்கு செல்லும் சாலை, அடுத்தடுத்து அகலப்படுத்தப்பட்டு, ரோட்டின் நடுவே சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், நகரை கடந்து செல்லும் வழித்தடங்கள் அனைத்தும், நான்கு வழிச்சாலையாக மாறியுள்ளது.
ஆனால், முறையாக மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை பெய்யும் போது, அடித்து வரப்பட்ட மண், சென்டர்மீடியன் ஓரத்தில் குவிந்து கிடக்கிறது. அதேநேரம், கடந்த சில நாட்களாக பகலில் வீசும் காற்றின் காரணமாக, ரோடு முழுவதும் புழுதி மண் படிந்த நிலையில் காணப்படுகிறது.
கனரக வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறப்பதால், பின்தொடர்ந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அதில் பயணிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கின்றனர். சில வழித்தடங்களில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், மண்ணில் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். நெடுஞ்சாலையின் நடுவே உள்ள மண்ணை அகற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் முன்வருவதில்லை.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரின் பிரதான சாலைகளின் நடுவே, மண் பரவி உள்ளது. நெடுஞ்சாலை பணியாளர்கள், பராமரிப்பு பணி மேற்கொள்ள முனைப்பு காட்டுவதில்லை.
நாளுக்கு நாள் சாலையில் குவியும் மண்ணால், விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. துறை ரீதியான அதிகாரிகள் சாலையில் படிந்த மண்ணை அகற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

