/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டின் வளைவில் 'பார்க்கிங்'; விபத்து ஏற்படும் அபாயம்
/
ரோட்டின் வளைவில் 'பார்க்கிங்'; விபத்து ஏற்படும் அபாயம்
ரோட்டின் வளைவில் 'பார்க்கிங்'; விபத்து ஏற்படும் அபாயம்
ரோட்டின் வளைவில் 'பார்க்கிங்'; விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 15, 2025 09:58 PM

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி ---- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோதவாடி செல்லும் ரோட்டில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கிணத்துக்கடவு அருகே, பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோதவாடி செல்லும் இணைப்பு ரோடு வழியாக தினமும், நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இணைப்பு ரோட்டில் வளைவு பகுதியில், கார் மற்றும் கனரக வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கோதவாடி ரோட்டில் திரும்பும் போது, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்பட்டுள்ளது தெரியாமல் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் இவ்வழியாக வேலைக்கு செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, வளைவு பகுதியில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.