/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.கே.எஸ். அணி வீரர் 140 ரன் எடுத்து அசத்தல்
/
ஆர்.கே.எஸ். அணி வீரர் 140 ரன் எடுத்து அசத்தல்
ADDED : நவ 26, 2025 07:13 AM

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், முதலாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.ஐ., சி.ஏ., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில்நடக்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியும், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியினர், 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 255 ரன் எடுத்தனர்.
வீரர் சித்தார்த், 69 ரன், பிரசன்னா, 51 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்களான கிருஷ்ணா, சந்தீஷ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியினர், 44.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 259 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்கள் பாலதரன், 140 ரன், சந்தோஷ், 57 ரன், சச்சின், 46 ரன் எடுத்தனர்.

