UPDATED : அக் 25, 2026 06:47 PM
ADDED : அக் 25, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
காரமடை: நீலகிரியில் பெய்து வரும் கனமழையால், காரமடை – மஞ்சூர் மலைப்பாதை சாலையில் உள்ள குண்டூர் பகுதியில், சாலையோரத்தில் மண் சரிந்து, தார் சாலையின் ஒரு பகுதி உள்வாங்கி பள்ளமாக மாறியுள்ளது.
இவ்வழியாக வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்க, தற்காலிகமாக சிறிய கற்கள் அடுக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரமடை வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
