UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 06:36 PM
அ நிறம் | அளவு
கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
உக்கடம்: பொன்னையராஜபுரம் மனோஜ்குமார், அம்பிகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் நிர்வாகியாக உள்ளார். 23ம் தேதி இரவு 10:30 மணிக்கு, கோவில் பூசாரி மாணிக்கம் கோவில் கேட்டை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் 24ம் தேதி காலை 7 மணிக்கு மனோஜ்குமார் கோவிலுக்கு சென்றபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் திருடு போயிருந்தது. வெரைட்டி ஹால் ரோடு போலீசார் விசாரணையில், செல்வபுரம் நவீன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்து, 3.9 கிராம் கோவில் நகையை மீட்டனர்.
