sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழையால் சேதமடைந்த சாலை; விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

/

மழையால் சேதமடைந்த சாலை; விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

மழையால் சேதமடைந்த சாலை; விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

மழையால் சேதமடைந்த சாலை; விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு


ADDED : அக் 29, 2024 08:57 PM

Google News

ADDED : அக் 29, 2024 08:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: மழையால், பொள்ளாச்சி சுற்றப்பகுதியில், பிரதான வழித்தடங்களில் உள்ள தார் சாலைகள், மிகவும் சேதமடைந்து வருகின்றன.

பொள்ளாச்சி நகரில், உடுமலை பிரதான சாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. மழையால், தேர்முட்டியில் இருந்து திப்பம்பட்டி வரையிலான சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளங்களாக மாறி வருகின்றன.

குறிப்பாக, ஊஞ்சவேலாம்பட்டி அருகே உள்ள சாலையில், பல இடங்களில் சேதம் ஏற்பட்டு, தார் பெயர்ந்து, கரடுமுரடாக மாறியுள்ளது. சேதமடைந்த பகுதியில், மழைநீர் தேக்கமடைவதால், வாகன ஓட்டுநர்கள் பரிதவிக்கின்றனர்.

மேலும், சாலையில் படியும் மண்ணால், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்குகின்றனர். சாலையின் சில பகுதிகளில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், ஜல்லிக்கற்களுடன் 'எம்.சாண்ட்' சேர்த்து, பள்ளங்கள் மூடப்படுகிறது. அதுவும், சிறு மழைக்கு கூட தாக்குப்பிடிக்காமல், மீண்டும் பள்ளங்களாக மாறியுள்ளது.

வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'தார் சாலையை புதுப்பித்தல், புனரமைத்தல் பணிக்காக, பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதற்கேற்ப பராமரிப்பு பணியையும் தொடர வேண்டும். அப்போதுதான் சாலை சேதமடைவதை தடுக்க முடியும்.

நெடுஞ்சாலைத்துறையினர், ரோடுகளை புதுப்பித்து, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us