/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை மேம்பாட்டு பணி பிப்.,க்குள் முடிக்க திட்டம்
/
சாலை மேம்பாட்டு பணி பிப்.,க்குள் முடிக்க திட்டம்
சாலை மேம்பாட்டு பணி பிப்.,க்குள் முடிக்க திட்டம்
சாலை மேம்பாட்டு பணி பிப்.,க்குள் முடிக்க திட்டம்
ADDED : ஜன 17, 2026 05:01 AM
கோவை: அரசு மருத்துவமனையில் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை, பிப்., மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, டீன் கீதாஞ்சலி தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில், 9.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை, கழிவுநீர் மேம்பாட்டு பணிகள் நடந்துவருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்லும் இடம் என்பதால், சாலை மேம்பாட்டு பணிகளில் தாமதம் நிலவியது. தற்போது, இப்பணிகள் வேகமெடுக்க துவங்கியுள்ளது.
சாலை பணிகள் குறித்து நேற்று டீன் கீதாஞ்சலி, டாக்டர் கண்ணதாசன் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர். டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''சாலை அமைக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. பிப்., இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.