/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விரிவாக்கத்தால் குழாய்கள் உடைப்பு; மக்கள் தவிப்பு
/
சாலை விரிவாக்கத்தால் குழாய்கள் உடைப்பு; மக்கள் தவிப்பு
சாலை விரிவாக்கத்தால் குழாய்கள் உடைப்பு; மக்கள் தவிப்பு
சாலை விரிவாக்கத்தால் குழாய்கள் உடைப்பு; மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 06, 2025 11:45 PM
அன்னுார்; சாலை விரிவாக்கத்தால் குழாய்கள் உடைக்கப்பட்டதால் ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு, 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இப்பணியின் போது குன்னத்தூராம்பாளையம், சோமனுார் பிரிவு, நாகமாபுதூர் ஆகிய இடங்களில் சாலையின் இருபுறமும் தோண்டிய போது குழாய்கள் உடைந்தன.
இதையடுத்து பனந்தோப்பு மைல், குன்னத்தூராம்பாளையம், சாலை பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் கார்த்திகேயன் கூறுகையில், சாலை விரிவாக்க பணி துவங்குவதற்கு முன்பே பேரூராட்சி நிர்வாகத்திடம் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். தற்காலிக இணைப்பு தர வேண்டும் என கடிதம் கொடுக்கப்பட்டது.
எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது குழாய்கள் உடைக்கப்பட்டு குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறியாளர்கள் உடனடியாக கள ஆய்வு செய்து தற்காலிகமாக சர்ச் வீதி வழியாக குழாய் இணைப்பு ஏற்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.