/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரப்பாலம் அருகே சாலை விரிவாக்கம்; அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு காத்திருப்பு

ADDED : ஜூன் 05, 2025 01:15 AM
கோவை; கோவை - பாலக்காடு ரோட்டில், மரப்பாலத்தில் உள்ள குறுகலான ரயில்வே கீழ்ப்பாலத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சாலையை அகலப்படுத்த, தமிழக அரசு இன்னும் நிதி ஒதுக்காமல் உள்ளது.
கோவை - பாலக்காடு ரோட்டில், மரப்பாலம் என்கிற இடத்தில் குறுகலான ரயில்வே சுரங்கப்பாதை செல்கிறது. இப்பகுதியை கடந்து செல்ல வாகனங்கள் சிரமப்படுகின்றன. அதனால், 82.7 மீட்டர் நீளம், 21.9 மீட்டர் அகலத்துக்கு ரயில்வே பாக்ஸ் முறையில் நான்கு வழிச்சாலையாக விஸ்தரிக்கும் பணியை, பாலக்காடு ரயில்வே கோட்டம் துவக்கியுள்ளது.
வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இப்பணி முழுமையாக முடிய, ஓராண்டு ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மரப்பாலத்தின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, 800 மீட்டர் துாரத்துக்கு நான்கு வழிச்சாலையாக்கும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மேற்கொள்ள இருக்கிறது.
ரூ.102.5 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீட்டுக்காக, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது; இரு மாதங்களாகியும் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. நிர்வாக அனுமதி வழங்கி, அரசாணை வெளியிட்ட பிறகு, டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.