/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எச்சரிக்கை அறிவிப்பின்றி சாலை சந்திப்புகள்
/
எச்சரிக்கை அறிவிப்பின்றி சாலை சந்திப்புகள்
ADDED : நவ 06, 2025 11:13 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி - ஆழியாறு இடையிலான வழித்தடத்தில், அதிக வாகனங்கள் சென்றும் திரும்பும் சாலை சந்திப்புகளில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கிய ஆழியாறு வழித்தடத்தில், அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வார விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பிரதான சாலையில், அதிகப்படியான கிராமச்சாலைகள் இணைகின்றன. இருப்பினும், அதிகப்படியான வாகனங்கள் சென்று திரும்பும் சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் அறிவிப்பு பலகை மற்றும் 'ரிப்ளக்டிங்' சிக்னல் அமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, விபத்துகளை தவிர்க்க, இவ்வழித்தடத்தில், தகவல் சின்னங்கள் உத்தரவு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

