தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாலை பராமரிப்பு ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 06, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 01:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் மருதாசலம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 133யை ரத்து செய்து, 41 மாத காலத்தை ஓய்வூதிய பலன்களாக பொருந்தக் கூடிய அரசாணையை வெளியிட வேண்டும்.

அரசாணை எண் 338ன் படி, சாலை பணியாளர்களை, திறன்மிகு இல்லாத பணியாளர் என பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.

பணிவரன்முறை செய்யப்பட்ட முதுநிலை பட்டியல்படி, தகுதி வாய்ந்த சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆபத்து நிறைந்த பணிகளுக்கு ஏற்ப, 10 சதவீதம் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்க பொறுப்பாளர் கிருஷ்ணசாமி, மாநில தணிக்கையாளர் ஆறுச்சாமி, கிணத்துக்கடவு கோட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us