/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்குளத்தின் கரையில் ரூ.14.48 கோடியில் ரோடு; மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு
/
செங்குளத்தின் கரையில் ரூ.14.48 கோடியில் ரோடு; மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு
செங்குளத்தின் கரையில் ரூ.14.48 கோடியில் ரோடு; மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு
செங்குளத்தின் கரையில் ரூ.14.48 கோடியில் ரோடு; மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு
ADDED : பிப் 06, 2025 09:54 PM
கோவை; கோவை, பாலக்காடு ரோட்டில் இருந்து குளத்துப்பாளையம் ரோட்டை இணைக்கும் வகையில், ரூ.14.48 கோடியில், செங்குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் கட்டி, ரோடு போடும் பணியை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
குனியமுத்துார், செங்குளம் அருகே குளத்துப்பாளையத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 6 ஏக்கரில், 720 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு வசிப்போரும், குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர்களும், பாலக்காடு ரோட்டுக்கு வருவதற்கு இணைப்பு சாலை உருவாக்கிக் கொடுக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தது.
அதையேற்று செங்குளத்தின் கரையில், பாலக்காடு மெயின் ரோடு முதல் குளத்துப்பாளையம் வரை தடுப்புச்சுவர் கட்ட ரூ.6.75 கோடி, உபரி நீர் செல்லும் பகுதியில் பாலம் கட்ட ரூ.3.75 கோடி, குளக்கரையில் தார் ரோடு போட ரூ.3.50 கோடி, தெருவிளக்குகள் அமைக்க ரூ.48.28 லட்சம் என, 14 கோடியே, 48 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாயை, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியில் மாநகராட்சி ஒதுக்கியது.
இப்பணியை, கடந்தாண்டு டிச., மாதம் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். குளத்தின் கரையின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டுதல், பாலம் அமைத்தல், ரோடு போடுதல், மின் கம்பங்களுடன் தெருவிளக்குகள் அமைத்தல் என, நான்கு பணிகளாக பிரித்து செய்யப்படுகின்றன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று நேரில் ஆய்வு செய்து, பணியை வேகப்படுத்த, பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை வழங்கினார்.