/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு சீரமைப்பு பணி
/
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு சீரமைப்பு பணி
ADDED : மே 12, 2025 11:21 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு அருகே உள்ள, வடசித்தூர் -- நெகமம் ரோடு சீரமைப்பு பணிகள் நடந்தது.
வடசித்தூரில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டை நாள்தோறும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோட்டில் அதிகமாக வளைவு பகுதிகள் உள்ளது. ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக இரவு நேர பயணத்தில் பைக் ஓட்டுநர்கள் தடுமாறி வந்தார்கள்.
இதை தவிர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த ரோட்டில் சேதமடைந்திருந்த பகுதி மற்றும் சிறு பள்ளங்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.