/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.142 கோடிக்கு சாலை சீரமைப்பு; பின்னேற்பு தீர்மானத்தில் சந்தேகம்
/
ரூ.142 கோடிக்கு சாலை சீரமைப்பு; பின்னேற்பு தீர்மானத்தில் சந்தேகம்
ரூ.142 கோடிக்கு சாலை சீரமைப்பு; பின்னேற்பு தீர்மானத்தில் சந்தேகம்
ரூ.142 கோடிக்கு சாலை சீரமைப்பு; பின்னேற்பு தீர்மானத்தில் சந்தேகம்
ADDED : ஜூலை 30, 2025 09:30 PM
கோவை; கோவையில் ரூ.142 கோடிக்கு, 358.2௮ கி.மீ., துாரத்துக்கு தார் சாலை சீரமைக்கும் டெண்டர்களுக்கு முன்அனுமதி வழங்கி விட்டு, மாமன்றத்தில் பின்னேற்பு தீர்மானம் கொண்டு வருவது, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், காஸ் குழாய், மின் புதை வடம் பதிக்க குழி தோண்டியதால் ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது.
மழை பெய்த காரணத்தினாலும் பல இடங்கள் மோசமாக உள்ளன. இவற்றை சீரமைக்க, 200 கோடி ரூபாய் தமிழக அரசு சிறப்பு நிதி வழங்கியது. அதில், 502 கி.மீ., துாரத்துக்கு, 3,486 எண்ணிக்கையில் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.
இதில், 358.28 கி.மீ., துாரத்துக்கு ரூ.142 கோடியில், 92 சிப்பங்களாக பிரித்து, தார் ரோடு போடுவதற்கு இம்மாத துவக்கத்தில் டெண்டர் கோரப்பட்டது. இவற்றை திறனாய்வு குழு பரிசீலனை செய்து, மாமன்றத்துக்கு பரிந்துரை செய்தது. இருப்பினும் அவசர அவசியம் கருதி, மேயரின் முன்அனுமதி பெற்று, தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்து, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 90.93 கி.மீ., 27.66 கி.மீ., 101.49 கி.மீ., 47.65 கி.மீ., 90.55 கி.மீ., என தனித்தனியாக பிரித்து, மாநகராட்சியில் இன்று (31ம் தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இம்மாத துவக்கத்தில் டெண்டர் கோரப்பட்டது; அடுத்த ஒரு வாரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. அதை மன்ற கூட்டத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றிய பின், 'ஒர்க் ஆர்டர்' கொடுக்காமல், அதற்குள்ளாகவே முன் அனுமதி கொடுத்து விட்டு, பின்னேற்பு தீர்மானங்களாக வைத்திருப்பது, எதிர்க்கட்சி கவுன்சிலர்களிடம், சந்தேகத்தை கிளப்பிஉள்ளது.