/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை சீரமைக்கும் பணி; போக்குவரத்து மாற்றம்
/
சாலை சீரமைக்கும் பணி; போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 12, 2025 12:18 AM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பிச்சிபாளையம் ரோட்டில் ரயில்வே பாலத்தின் கீழுள்ள பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்த ரயில்வே பாலத்தின் வழியாக ஊட்டி, மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், குறைந்த தொலைவில் கோவை விமான நிலையம், கணபதி சாலைகளை சென்றடைய முடியும். இப்பகுதியில் ஜி.கே.டி., பள்ளி, தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரிய ஹவுசிங் யூனிட் வளாகம், சிறு தொழிற்பேட்டைகள் இருப்பதால், இந்த சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
இந்நிலையில், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை மிகுந்த சேதமடைந்த நிலையில் இருந்ததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதை சீரமைக்க பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில், ரயில்வே துறையிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து பேரூராட்சியின் பொது நிதியின் கீழ் சாலையை சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் துவக்கி வைத்தார்.
இப்பணி ஒரு வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பெரியநாயக்கன்பாளையம் அத்திப்பாளையம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ள, பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.