/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 04, 2024 11:32 PM

கோவை : கோவை மாநகர போலீஸ் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோவை மாநகர போலீஸ், உயிர் அமைப்பு சார்பில், கல்லுாரி மாணவர்கள் - போலீசார் இணைந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
நேற்று நஞ்சப்பா ரோடு, லட்சுமி மில்ஸ், சிவானந்தா காலனி, கொடிசியா, அத்திப்பாளையம், ராஜவீதி, வேளாண் பல்கலை, காந்திபார்க், உக்கடம், சாய்பாபா காலனி, பொள்ளாச்சி சாலை ஆகிய 10 இடங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை, விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை பிடித்து வாகன ஓட்டிகள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு முகாமின் போது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், அதிக வேகம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட, 685 நபர்களுக்கு போலீசார் சாலை விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தனர். விதிமீறல்களில் ஈடுபட்ட 397 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.