/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 26, 2025 11:23 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு, தனியார் பஸ் ஓட்டுநர்கள், பள்ளி, கல்லுாரி பஸ் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், பி.ஏ., கல்லுாரியில் நடந்தது.
ரோட்டரி ராயல்ஸ் கிளப் தலைவர் அருள் கனகராஜ் வரவேற்றார். பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி முன்னிலை வகித்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், உரிமம் புதுப்பித்தல், காப்பீடு திட்டம், வாகனத்தில் உள்ளே, வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சேரன், செயலர் மகாலிங்கம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி., டிராபிக் ஆய்வாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முன்னாள் கோவை மாவட்ட தலைமை டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

