ADDED : டிச 12, 2025 05:08 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: துடியலுார் பஸ் ஸ்டாண்டில் கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு மற்றும் சங்கரா கல்லுாரி மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
நிகழ்ச்சியில், இரு சக்கர வாகன ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுநர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். போக்குவரத்து சட்டங்களை மீறாமல் சரியான இடத்தில் வாகனத்தை நிறுத்தி நடைமேடையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டன.
