ADDED : மார் 13, 2024 10:23 PM
அ நிறம் | அளவு
கோவை : நிர்மலா மகளிர் கல்லுாரி சாலை பாதுகாப்பு மற்றும் தமிழக போலீஸ் டிராபிக் வார்டன் கோவை அலகு சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி நுழைவாயில் முன் நடைபெற்றது.
இதில், கல்லுாரி சாலை பாதுகாப்பு குழுவினர் கோலாட்டம், கோமாளியாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள், விழிப்புணர்வு நாடகம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வுகள் வாயிலாக, மிதவேகம் மிகநன்று, தலைக்கவசம் உயிர்கவசம், அலைபேசியால் வரும் அல்லல்கள் குறித்து நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக போலீஸ் டிராபிக் வார்டன்கள் சாம் பாபு, ரங்க பிரபு, கல்லுாரி செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி பபியோலா, ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
