/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 24, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; குனியமுத்துார், ஆர்.கே.வி., சீனியர் செகண்டரி பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த பேரணியை, பள்ளியின் செயலாளர் ஜெசிந்தா செல்வி மற்றும் இணை செயலாளர் தாரணி தேவி துவக்கி வைத்தனர்.
முக்கிய சாலைகளின் வழியாக சென்ற பேரணியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் சென்றனர்.
'வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என முழக்கமிட்டு, மாணவர்கள் வாகனஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.