/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 28, 2025 05:03 AM

மேட்டுப்பாளையம்: மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேட்டுப்பாளையத்தில், தேசிய சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
தமிழக அரசின், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ் வொரு வருடமும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை, தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இம்மாதத்தில் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும், விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி வாயிலாக விழிப்புணர்வு வாசகங்கள் ஓட்டுனர்களை சென்றடையும் வகையில் கொடுக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் துவங்கிய பேரணி பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ரஜினிகாந்த் இப்பேரணிக்கு தலைமை தாங்கினார். உதவிப்பொறியாளர், போலீசார், போக்குவரத்து போலீசார் ஆகியோர் முன்னிலையில், அனைத்து சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பேரணியில் கலந்துகொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் இருசக்கரம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, உடன் பயணிப்பவர்களும் தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், காரில் பயணிப்போர் அனைவரும் சீட்பெல்ட் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
பிரதான சாலையில் சந்திப்புகளில் வேகத்தை குறைத்து கவனமுடன் கடந்து செல்ல இப்பேரணி மூலம் அறிவுறுத்தப்பட்டது.---

