/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 13, 2024 12:10 AM

கோவை:சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., 1 மற்றும் 2 யூனிட்டுகள் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சங்கரா கல்வி நிறுவனங்களின், இணை செயலாளர் கல்யாணராமன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
துடியலுார் போலீசார் மற்றும் உயிர் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பேரணி, துடியலுார் பேருந்து நிறுத்தம் முதல் விஸ்வநாதபுரம், குபேர ஆஞ்சநேயர் கோவில் வரை நடந்தது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். போலீஸ் எஸ்.ஐ.,ஆனந்தீஸ்வரன், சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் முதல்வர் ராதிகா, என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் பாரத், ராமச்சந்திரன், உயிர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரணியில் பங்கேற்றனர்.