ADDED : ஜன 28, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
ரேஸ்கோர்ஸ்: 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன், தேசிய காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் பாலமுரளி, தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் கோவை மண்டல, கிளை அலுவலக ஊழியர்கள், முகவர்கள் பலர் பங்கேற்றனர். உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
