ADDED : ஆக 21, 2026 01:40 PM
அ நிறம் | அளவு
கோவை: கணபதி, சத்தி ரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு எஸ்.ஐ. லாவண்யா மற்றும் போலீசார், வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர்.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் போன்ற விதிமீறல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். சாலை பாதுகாப்பு கோஷங்கள் எழுதிய அட்டைகள் ஏந்தியும், கரடி, முயல் பொம்மைகள் காட்டியும் கவனம் ஈர்த்தனர். துண்டு பிரசுரம் வழங்கினர்.
