/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரமபத விளையாட்டு வழியே சாலை பாதுகாப்பு பாடம்
/
பரமபத விளையாட்டு வழியே சாலை பாதுகாப்பு பாடம்
ADDED : நவ 28, 2025 05:09 AM

கோவை: கோவை பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், மாணவர்களுக்கு 'பரமபதம்' விளையாட்டின் வழியே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
'உயிர்' அமைப்பின் சார்பில், மாணவர்களுக்கு பிடித்தமான விளையாட்டில், நுாதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகமாக செல்வது ஆகியவை பாம்புகளாகவும் (சறுக்கல்கள்), சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவது ஏணிகளாகவும் (முன்னேற்றம்) சித்தரிக்கப்பட்டு மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியை சகுந்தலா கூறுகையில், ''சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து வகுப்பறையில் பாடம் நடத்துவதை விட, இதுபோன்று விளையாட்டின் மூலம் கற்றுத்தரும்போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். இந்த எளிய அணுகுமுறை, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்கள் ஆழமாக புரிந்துகொள்ளவும், மனதில் பதியவைக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது,'' என்றார்.

