ADDED : பிப் 21, 2026 05:48 AM
கருமத்தம்பட்டி: சாலை பாதுகாப்பு வலியுறுத்தி, கருமத்தம்பட்டியில் கல்லுாரி மாணவர்கள் பேரணி நடத்தினர்.
கருமத்தம்பட்டி ஜான்சன் இன்ஜினியரிங் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் பேரணியை துவக்கி வைத்தார்.
தலைக்கவசம்; உயிர் கவசம், சிக்னலை மதிப்போம்; விபத்தை தவிர்ப்போம். மொபைல் போன் பேசியபடி வாகனங்களை இயக்காதீர், அதிக வேகம் உயிரை பறிக்கும் என்பன உட்பட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, பேரணியில் மாணவர்கள் ஏந்தி சென்றனர். கருமத்தம்பட்டி நால்ரோட்டில் இருந்து சோமனூர் ரோடு வழியாக கொங்கு கலையரங்கம் வரை பேரணி நடந்தது.
கல்லுாரி முதல்வர் நாகராஜன், எஸ்.ஐ., செல்வராஜ் மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
