/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் கட்டண விவகாரம்; அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு
/
சாலையில் கட்டண விவகாரம்; அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு
சாலையில் கட்டண விவகாரம்; அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு
சாலையில் கட்டண விவகாரம்; அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு
ADDED : ஆக 04, 2025 08:17 PM
கோவை; நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை, எத்தனை இடங்களில் எவ்வளவு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து, விரிவாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையரகத்துக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் கூறியதாவது:
நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரையிலான பைபாஸ் சாலையில், இருந்த ஆறு சுங்கச்சாவடிகளில், ஐந்தை அப்புறப்படுத்தி விட்டு, ஒன்றில் மட்டும் சுங்கம் வசூலிக்கவும், உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையும் மீறி, நிர்ணயிக்கப்பட்ட ஒரு சோதனை சாவடி தவிர, பிற சோதனை சாவடிகளுக்கு முன் நின்று கொண்டு, சிலர் சுங்க கட்டணம் வசூலிப்பதாகவும், அதுவும் இரட்டிப்பாக வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரித்து, அதிகாரிகள் குழு கள ஆய்வு மேற்கொண்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.