/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடம்பன் கோம்பையில் சாலை பணி விறுவிறுப்பு
/
கடம்பன் கோம்பையில் சாலை பணி விறுவிறுப்பு
ADDED : ஆக 29, 2025 10:18 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே கடம்பன் கோம்பையில் தார் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்டது கடம்பன் கோம்பை மலைக்கிராமம். 28 குடும்பங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதி எதுவும் இல்லை. சுமார் 5 கி.மீ, தூரம் மக்கள் நடந்து சென்று தான், அருகில் உள்ள நீராடி மற்றும் பில்லூர் டேம் பகுதிக்கு செல்ல முடியும்.
இதனிடையே, இப்பகுதியில் தார் சாலை ரூ.1.62 கோடி மதிப்பில் சுமார் 5 கி.மீ., தூரம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.-

