/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2025 11:33 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்டம், சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கருணாகரன் வரவேற்றார்.
கோட்ட செயலாளர் மருதாசலம், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநிலச் செயலாளர் ஆறுச்சாமி, ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்ற ஐகோர்ட தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.  மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை --140யை ரத்து செய்ய வேண்டும், என, கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாசாமி, மாநில துணைத் தலைவர் ரங்கசாமி, கோட்டப் பொருளாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

