/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பணியாளர்கள் பறையடித்து போராட்டம்
/
சாலை பணியாளர்கள் பறையடித்து போராட்டம்
ADDED : ஜன 28, 2026 05:13 AM

கோவை: சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் பறையிசை முழக்கமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், போராட்டம் நடந்தது. மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும், நெடுஞ்சலை பராமரிப்பு பணியை அரசே செயல்படுத்த வேண்டும், கிராமப்புற இளைஞர்களை சாலைப்பணியாளராக நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி, கோட்டச் செயலாளர்கள் ஜெகநாதன், கருப்பசாமி முருகன், புவனேஸ்வரி மற்றும் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் உரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், பறை இசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

