/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு கி.மீ.,க்கு ரோடு படுமோசம்; 20 ஆண்டுகளாக போராட்டம்
/
ஒரு கி.மீ.,க்கு ரோடு படுமோசம்; 20 ஆண்டுகளாக போராட்டம்
ஒரு கி.மீ.,க்கு ரோடு படுமோசம்; 20 ஆண்டுகளாக போராட்டம்
ஒரு கி.மீ.,க்கு ரோடு படுமோசம்; 20 ஆண்டுகளாக போராட்டம்
ADDED : ஜூலை 06, 2025 11:27 PM

வால்பாறை; வால்பாறை அருகே, ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க, 20 ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
வால்பாறையில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ளது ஈட்டியார் எஸ்டேட். இங்குள்ள எஸ்டேட்டில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையின் போது, நள்ளிரவில் மாடன் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந்நிலையில், ஈட்டியார் எஸ்டேட் நுழைவுவாயிலில் இருந்து கப்பப்பாடி வரையான ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க கோரி, கடந்த 20 ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 20வது வார்டில் ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் ரோட்டை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஈட்டியார் எஸ்டேட் ரோட்டை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனால், அந்த ரோடு தனியார் எஸ்டேட் வசம் உள்ளதாலும், ரோட்டை சீரமைக்க எஸ்டேட் நிர்வாகம் தடையின்மை வழங்கவில்லை. தடையின்மை சான்று நகராட்சிக்கு முறைப்படி வழங்கினால், ரோடு உடனடியாக செப்பனிடப்படும்,' என்றனர்.