தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழைக்கு 'பஞ்சர்' ஆன ரோடுகள்

மழைக்கு 'பஞ்சர்' ஆன ரோடுகள்

மழைக்கு 'பஞ்சர்' ஆன ரோடுகள்


ADDED : ஜூன் 26, 2025 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு பகுதியில், சேதமடைந்த ரோடுகளில் மழை நீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு சுற்று பகுதிகளில், மக்கள் அதிகமாக பயணம் செய்யும் ரோடுகளில் அதிகளவு மழை நீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர்.

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில், மழை நீர் தேங்கி நிற்பதால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ரோடு குறுகலாக இருப்பதால், மக்கள் நடந்து செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

கல்லாங்காட்டுபுதூர் அருகே, பெட்ரோல் பங்க் முன்பாக, ரோட்டில் உள்ள பள்ளத்தில் அதிகளவு மழைநீர் தேங்கி இருப்பதால், வாகனம் ஓட்டுநர்கள் அவ்வழியில் பயணிக்க சிரமப்படுகின்றனர்.

சர்வீஸ் ரோட்டில் இருந்து பகவதிபாளையம் செல்லும் இணைப்பு ரோட்டின் முன் பகுதியில் இருந்து குழி, தற்போது பெரிதாகி உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.

இதே போன்று, கிணத்துக்கடவு மின்வாரிய அலுவலகம் செல்லும் ரோடு மற்றும் அரசம்பாளையம் செல்லும் ரோட்டை அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ரோடுகளில், பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வாகனம் ஓட்டும் போது தடுமாறுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில், இவ்வழியில் பயணிப்பவர்கள் கீழே விழுகின்றனர். எனவே, பாதுகாப்பு கருதி பிராதன ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us