/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர சோலை வனம்; நெடுஞ்சாலை துறை அசத்தல்
/
சாலையோர சோலை வனம்; நெடுஞ்சாலை துறை அசத்தல்
ADDED : நவ 07, 2024 08:27 PM

அன்னுார் ; மரக்கன்றுகள் நடுவதால் தென்னம்பாளையம் சாலை சோலைவனமாக மாறி வருகிறது.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் தலா 5 அடி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக, குரும்பபாளையம், கோவில்பாளையம், கணேசபுரம், அன்னுார், புளியம்பட்டி பகுதியில் 600க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இத்துடன் அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் சாலை விரிவாக்க பணிக்கு 600க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றமும், தமிழக அரசும், சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்படும் மரங்களுக்கு 10 மடங்கு கூடுதல் மரக்கன்றுகள் நட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளன. இதன்படி மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், அன்னூரில், குமாரபாளையம் சாலை, தென்னம்பாளையம் சாலை மற்றும் பிள்ளையப்பன் பாளையம் சாலையில் 20 அடிக்கு ஒரு மரக்கன்று வீதம் நடப்பட்டது. அந்த மரக்கன்றுகளை நடும் பணி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொட்டியனுார் பிரிவு, ஆலாம்பாளையம் ஆகிய இடங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் 10 அடி உயரத்திற்கு வளர்ந்து சோலைவனம் போல் காட்சியளிக்கிறது.