/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர செடிகள் அகற்றம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
/
சாலையோர செடிகள் அகற்றம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
ADDED : ஜூலை 10, 2025 08:11 PM

வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறை மலைப்பாதையில் ரோட்டை ஆக்கிரமித்திருந்த செடிகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
வால்பாறை - ஆழியாறு இடையேயான மலைப்பாதையில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் அதிக அளவில் இயக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் ரோட்டின் இருபுறமும், செடிகள் காடு போல் வளர்ந்துள்ளது. இதனால், ரோடு சிறுத்து, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள சாலையோர செடிகளை, பொக்லைன் கொண்டு அகற்றினர். இதனால், வாகன ஓட்டுநர்களும், சுற்றுலா பயணியரும் நிம்மதியாக பயணித்தனர்.

