ADDED : ஜூலை 23, 2025 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வடவள்ளி, கஸ்தூரி நாயக்கன்பாளையம் அபிராமி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீ பாலாஜி, 55. இவர் குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் மதியம், கோவை திரும்பினார்.
வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரிந்தது. வீ ட்டில் விலை உயர்ந்த நகைகள், பணம் இல்லாததால், தப்பியது. கண்காணிப்பு கேமராவில், இரு திருடர்கள் நகை, பணத்த தேடி ஒவ்வொரு அறையாக சென்று திரும்பும் காட்சிகள் பதிவாகி இருந்தன. ஸ்ரீ பாலாஜி அளித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.