தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அறுவை சிகிச்சையில் அசத்தும் 'ரோபோ' 

அறுவை சிகிச்சையில் அசத்தும் 'ரோபோ' 

அறுவை சிகிச்சையில் அசத்தும் 'ரோபோ' 


ADDED : ஜூலை 29, 2025 08:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், கடந்த ஓராண்டாக 150 அறுவை சிகிச்சைகள், ரோபோ உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக, 'டாவின்சி ரோபோடிக் -11' எனும் ரோபோ, அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து துறைகளிலும் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ''ரோபோ அறுவைசிகிச்சை மேற்கொள்வதால், துல்லியத்தன்மை அதிகரித்துள்ளது. ரத்த இழப்பு குறைவாகவும், நோயாளி குணமாகும் நாட்கள் விரைவாகவும் உள்ளது, '' என்றார்.

நிகழ்வில் ரோபோடிக் அறுவைசிகிச்சை திட்டபொறுப்பாளர் டாக்டர் பிரவீன் ரவிசங்கரன், புற்றுநோயியல் துறைத்தலைவர் அருள்ராஜ், ரோபோடிக் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் வெங்கடேஷ், மகளிர் மருத்துவ புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் லதா பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us