ADDED : ஏப் 05, 2025 11:09 PM

கோவை:ராக்ஸ் பேட்மின்டன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள், சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளதாக, 'ராக்ஸ் பள்ளிக்கூடம்' நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
கோவை கொடிசியா ரோடு, ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் பேட்மின்டன் அகாடமி, தேசிய பேட்மின்டன் அணி தேசிய தலைமை பயிற்சியாளர் புலேலா கோபிசந்த் வழிகாட்டுதலில் நடத்தப்படும், 'பேட்மின்டன் குருகுலம்' பயிற்சி பள்ளியுடன், நான்கு ஆண்டுகளுக்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
ராக்ஸ் பள்ளிக்கூடம் நிறுவனர் சுவேதா கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:
ஒப்பந்தத்திற்கு பின், 7 - 8 மாணவர்கள் ஜூனியர், சீனியர் நிலை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ளனர். 8 - 9 வீரர்கள் தேசிய மற்றும் ஆசிய அளவிலான 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில்,பதக்கம் வென்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் பயிற்சி பெற்ற தஞ்சாவூரை சேர்ந்த ஹரி மற்றும் ரூபன் ஆகியோர், இங்கு பயிற்சி பெற்ற பின், உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் தரவரிசைப்பட்டியலில், 45ம் இடம் பிடித்துள்ளனர்.வீரர்கள் நர்தனா, அருண் முருகன் ஆகியோர் 2024 - 25 க்கான தேசிய விளையாட்டுகளில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில், இரு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், தேசிய பேட்மின்டன் அணி தேசிய தலைமை பயிற்சியாளர் புலேலா கோபிசந்த், பேட்மிண்டன் குருகுல்' பயிற்சி பள்ளியின் நிறுவனர் சுப்ரியா தேவ்கன் மற்றும் தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதா பங்கேற்றனர்.
