/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேடியோ காலர் பொருத்தி 'ரோலக்ஸ்' யானை விடுவிப்பு
/
ரேடியோ காலர் பொருத்தி 'ரோலக்ஸ்' யானை விடுவிப்பு
ADDED : நவ 13, 2025 11:23 PM

வால்பாறை: கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதியில் 'ரோலக்ஸ்' என்றழைக்கப்படும் ஒற்றை யானை, விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. யானை தாக்கி மனிதர்களும் இறந்தனர்.
இதையடுத்து, 'ரோலக்ஸ்' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வனப்பகுதியில் விட மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அக்., 16ம் தேதி கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி, 'ரோலக்ஸ்' பிடிக்கப்பட்டது. பின், ஆனைமலை வரகலியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
யானை ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில், வால்பாறை அடுத்த மானாம்பள்ளி மந்திரிமட்டம் வனப்பகுதிக்குள் நேற்று வனத்துறையினர் யானையை விடுவித்தனர்.
வனச்சரக அலுவலர் கிரிதரன் கூறுகையில், ''ரோலக்ஸ் நடமாட்டத்தை அறிய அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. வால்பாறைக்கு வந்த பின் ரோலக்ஸ் மிகவும் சாந்தமாக உள்ளது,'' என்றார்.

