/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாடு இரு பாலர் அணியினர் அசத்தல்
/
ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாடு இரு பாலர் அணியினர் அசத்தல்
ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாடு இரு பாலர் அணியினர் அசத்தல்
ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாடு இரு பாலர் அணியினர் அசத்தல்
ADDED : டிச 06, 2024 05:21 AM

கோவை : தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு 'சப் ஜூனியர்' இரு பாலர் அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம், கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 62வது 'தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்-2024' போட்டிகள் கோவை, பொள்ளாச்சியில் நேற்று துவங்கியது. வரும், 15ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், 13 மாநிலங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், இன்லைன் ஹாக்கி, ஆர்டிஸ்டிக், ரோலர் ஹாக்கி, ஆல்பைன், டவுன்ஹில் என, ஐந்து வகையாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை வ.உ.சி., பார்க்கில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் ரோலர் ஹாக்கியும், காந்தி பார்க்கில் இன்லைன் ஹாக்கி, கட்டாஞ்சிமலையில் டவுன்ஹில் போட்டியும், பொள்ளாச்சியில் இதர இரு வகை போட்டிகளும் நடக்கின்றன.
வ.உ.சி., மைதானத்தில் நேற்று 'சப் ஜூனியர்' மாணவர்களுக்கான போட்டியில், தமிழ்நாடு அணி, தெலுங்கானா அணியை, 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாணவியருக்கான போட்டியில், தமிழ்நாடு அணி, 4-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு-காஷ்மீர் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் அணி, 6-0 என்ற கோல் கணக்கில் ஆந்திர பிரதேசம் அணியை வென்றது. துவக்க விழாவில், மாவட்ட ஸ்கேட்டிங் சங்க செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சாந்த நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.