/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் காதல் ஜோடிகள் அலப்பறை
/
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் காதல் ஜோடிகள் அலப்பறை
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் காதல் ஜோடிகள் அலப்பறை
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் காதல் ஜோடிகள் அலப்பறை
ADDED : ஆக 04, 2025 07:37 PM
கிணத்துக்கடவு; பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், காதல் ஜோடிகளின் அலப்பறைகள் அதிகரித்து வருவதை, போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதில், ரயில்வே கேட் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் இவ்வழியில் வேகமாக செல்கின்றனர். இதில் தற்போது கிணத்துக்கடவு மற்றும் முள்ளுப்பாடி மேம்பாலத்தின் மீது, காதல் ஜோடிகள் மற்றும் இளைஞர்கள் பலர், தங்களது பைக்கை நிறுத்தி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட, ரீல்ஸ் வீடியோ எடுக்கின்றனர்.
இது பாலத்தின் மீது செல்லும் வாகனங்களுக்கு, பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. மேலும், இரவு நேரத்தில் ஆபத்தை உணராமல், மேம்பாலத்தின் தடுப்பு சுவற்றில் அமர்ந்து செல்பி எடுப்பது, ரோட்டின் நடுவே நின்று காதல் ஜோடிகள் செல்பி உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் இவ்வழியாக செல்லும் பிற இளைஞர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மேம்பாலத்தில் கூடுதல் கேமரா அமைக்க வேண்டும்.
இத்துடன் மேம்பாலத்தின் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், செல்பி எடுக்கும் காதல் ஜோடிகள் மீது, போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.