தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை அமைப்பு; வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

 பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை அமைப்பு; வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

 பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை அமைப்பு; வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்


ADDED : பிப் 28, 2026 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 07:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை கூடுதல் பஸ் ஸ்டாண்டில், பயணியர் வசதிக்காக மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் மற்றும் பயணியர் நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, கடந்த ஆறு மாதத்திற்கு முன் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

பழநி செல்லும் பஸ்கள் மற்றும் கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படும் நிலையில், பயணியர் காத்திருக்கும் பகுதியில் மேற்கூரை வசதி, பயணிகள் அமர இருக்கை என எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.

இதனால், பொதுமக்கள் பஸ்களுக்காக பல மணி நேரம், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை இருந்தது.

அவர்கள் வசதிக்காக மேற்கூரை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்த வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, நகராட்சி சார்பில் மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.

இதே போல், பஸ்கள் நிற்கும் ரேக் பகுதிகளிலும், பயணிகள் அமரும் இருக்கை அமைக்கவும், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.

மேலும், பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதி மற்றும் உட்பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை முழுமையாக அகற்றி, பயணிகள் எளிதாக பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us